கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 623 பொருட்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021

இலங்கை மத்திய வங்கியால் 600 இற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கி அதன் இறக்குமதி கட்டுப்பாடுகளை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய கையடக்க தொலைபேசி உட்பட 623 வீட்டு உபயோக பொருட்களை இறக்குமதி செய்யும்போது வங்கியின் வைப்பு வரம்பை இரட்டிப்பாக்கி, பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தமையே இதற்குக் காரணமாகும். எனினும், விசேடமாக கடந்த காலங்களின் ஆரம்பத்தில் இருந்து நாட்டிற்கு வேகமாக அந்நிய செலாவணியை கொண்டுவந்த தொழில்நுட்ப துறைகள் இந்த அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய கட்டுப்பாடுகள் கொவிட் தொற்றிற்கு பின்னரான பொருளாதார மீட்பு திட்டத்திற்கு பொருந்தாதென ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் என்பது அதிவேகமாக வளர்ந்துள்ள ஒரு துறையாகும். அத்துடன் இந்த ஆண்டு 1.7 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளது. இப்போது மத்திய வங்கியினால் முக்கிய தயாரிப்புகளுக்கு 100 சதவீத கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தாதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல - அமைச்சர்...
வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எ...
தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆண...