குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதானதல்ல – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021

அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், 2000 ரூபா தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என இணை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இணை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

கொரோனாவின் கடந்த கால பாதிப்புகளின் போது தலா 5,000 ரூபா ஏராளமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அதற்காக சுமார் 80 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் இதுபோன்ற நிவாரணங்களை வழங்குவதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.

நெருக்கடிக்கு மத்தியில், அரச நிறுவனங்களின் செலவுகள் முடிந்தவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நிதி அமைச்சு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டளைகளை பிறப்பித்துள்ளதாகவும் அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: