ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியது – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க!

Sunday, January 31st, 2021

உலகில் 190 நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வரிசையில் இருக்கின்ற போதிலும், இலங்கைக்கு இந்தியா முன்னுரிமை வழங்கியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு, அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியது என்றும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கைக்கு மிக விரைவில் எஸ்டா செனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது. மிகவும் இலாபமாக இந்த பெறுமதியை கொண்ட தடுப்பூசியே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சீனாவினால் 3 இலட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும். எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளது. எனினும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் தடுப்பூசிகள் நாட்டிற்கு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் நிச்சயமற்றே காணப்படுகின்றது.

மார்ச் மாதம் நடுப்பகுதி அல்லது மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த தடுப்பூசி நாட்டிற்கு கிடைக்கும் என தனக்கு அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 3 வகையிலான கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது என தெரிவித்த அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியானது, சிறியளவிலான பாதுகாப்பு மாத்திரமே என கூறிய அவர், சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: