வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன – பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் சாத்தியம் குறித்தும் ஆராய்வு!

Friday, October 15th, 2021

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் மற்றும் அவரது ஆலோசகர் ரியாத் ஹுசைன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வர்த்தக அமைச்சில் இடம்பெற்றுள்ளது..

இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வர்த்தக உறவுகளைப் பேணுவதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

இதுவரை காலமும் இலங்கையில் இருந்து பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உற்பத்தி பொருட்கள் தவிர, ஏனைய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஏனைய உற்பத்திகளையும் பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் உற்பத்தி செயல்முறைக்கு அதிக மதிப்பு வழங்கி, பங்களாதேஷ் தயாரிப்புகள் குறித்த தொழில் நுட்பத்தை பரிமாறிக்கொள்ளும் சாத்தியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது,

மேலும், மஹாபோல புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதி சபையின் கீழ் இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழக நிறுவனமொன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அதன்படி, பங்காளதேஷ் மாணவர்களும் இந்த உயர் கல்வி நிறுவனத்தில் தமது உயர்கல்வியைத் தொடர கிடைக்கும் வாய்ப்பு குறித்தும் அமைச்சர் பந்துல குணவர்த்தன பங்காளதேஷ் உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: