நாட்டில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!

Thursday, July 11th, 2019

18 வயதிற்கு குறைந்த சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த ஆராய்ச்சி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், அவ்வறிக்கையில் 18 வயதிற்கு குறைந்த சுமார் 6100 சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் அளவிலானோர் ஹெரோயின் போதைப்பொருளை தேடி அலைவதாகவும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 1,500 பெண்களும் 85,000 ஆண்களும் உள்ளடங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று இலட்சம் வரையானோர் கஞ்சா பயன்படுத்துவது இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதுடன், அதில் 1,500 பேர் பெண்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: