குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபிக்கு  ஈ.பி.டி.பியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் மலர் தூவி அஞ்சலி!

Tuesday, February 28th, 2017

நெடுந்தீவில் அமைந்துள்ள குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவுத் தூபிக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்தூவி  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நெடுந்தீவு மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொள்வதற்காக சென்றிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து மேற்கொண்ட தாக்கதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

குறித்த  சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் நினைவிடத்திற்கு இன்றையதினம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர்தூவி  நினைவஞ்சலி செலுத்தினர்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

image-0-02-06-5e53b0b8c527487f75eddc5b173a167874ff6843031909264e5a329a19b2ec7f-V image-0-02-06-05b6e560514889269194d8aaf008b3d5903f4ea0ac50105f10257d023149f864-V image-0-02-06-f308d098a00cb9640b527931f4041fa949cde47ed8af7dcc82a599b86dd32bfb-V

Related posts: