சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தம்மிக்க விஜேசிங்க!

Tuesday, December 15th, 2020

நாட்டிற்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் இறுதி ஒப்புதலுக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை காத்திருக்கின்றது என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடி வருவதாகவும் அவர்களின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதனால் அதிகாரிகளினால் பயணத்தை தடை விதிக்கப்பட்டது என்றும் எனவே, இந்த நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அவர்களால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு கொரோனா போன்ற ஒரு தொற்று ஏற்பட்டால், அந்தத் துறை மீண்டும் புத்துயிர்பெற தேவையான வழிகாட்டுதல்களையும் சுகாதார அதிகாரிகள் வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 26 முதல் இலங்கைக்கு வணிக சேவை உட்பட அனைத்து விமான சேவைகளையும் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ஜனவரி முதல் நாட்டினை படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: