வருடத்தின் நவம்பர் மாதம் வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, December 11th, 2023
வருடத்தின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000 க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனவரி 1ஆம் திகதிமுதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றுள் கணிசமான எண்ணிக்கையானது அரச ஊழியர் கட்டமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முறைப்பாடுகளாகும்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இலஞ்ச முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் விசாரணைப் பணிகளைத் தொடர்வதற்கு ஆணைக்குழுவில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


