சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண!

Tuesday, February 9th, 2021

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,300 க்கும் அதிகமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 12,012 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத 1,389 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 1,300 நிறுவனங்கள் மீது வழங்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 407 நிறுவனங்களில் 38 நிறுவனங்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு மாறாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணாத 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 3,056 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: