வரட்சி ஏற்பட்டாலும் நாட்டில் மின்சாரம் தடைப்படாது!

Wednesday, September 28th, 2016

 

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும்  தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் வாரங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வரட்சியான காலநிலை நிலவினால் இதனை எதிர்நோக்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீர் மின் நிலையங்களில் 100 வீத உற்பத்தி காணப்படும் போது செயற்படுத்தாது விடும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த இலங்கைக்கும் மின்சாரத்தை விநியோகம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்படுவது திட்டமிட்ட மின் தடை அல்ல எனவும் அவை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுவாக இந்த மாதங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என்ற போதிலும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும் என இலங்கை மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி கூறியுள்ளார்.

இதனால் மின்சாரத் தடைபற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் வரட்சி நீடித்தால் மின்சார விநியோகம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

blogger-image--1612070024

Related posts: