பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது – அர்ஜூன ரணதுங்க!
Tuesday, October 10th, 2017
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார். எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எரிபொருளின் விலையை குறைத்து நட்டத்திற்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்
Related posts:
எயிட்ஸ் உயிர்கொல்லியை குணப்படுததும் மருந்து கண்டுபிடிப்பு!
வறுமைகோட்டின் கீழ் வாழும் 1.38 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் சமூர்த்திகொடுப்பனவு மேலு...
எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டம்...!
|
|
|
திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களில் பரிசோதனை - எதிர்வரும் நாட்களில் அறிக்கை கிடைக்கும் என திரிபோ...
கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு ...
இலங்கையில் இடம்பெறும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...


