திரிபோஷவின் தரத்தை ஆராய 2 நிறுவனங்களில் பரிசோதனை – எதிர்வரும் நாட்களில் அறிக்கை கிடைக்கும் என திரிபோஷ நிறுவனம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022

திரிபோஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெற உள்ளதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கைகளே கிடைக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கைகள் கிடைத்ததன் பின்னர் திரிபோஷவின் தரம் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, உரிய குறியீட்டின் படி உற்பத்தி செய்யப்படும் திரிபோஷ, சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திரிபோஷ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்திலுள்ள அஃப்லடோக்சின் (Aflatoxin) வீதம் தொடர்பிலான அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்ப...
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் - இராஜாங்க அமைச்...
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!