வடமராட்சி கிழக்கு ஊடாக பருத்தித்துறை – வவுனியா புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

Friday, May 13th, 2016

பருத்தித்துறை – மருதங்கேணி – புதுக்காடு ஊடாக வவுனியாவிற்கான புதிய பேருந்து சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சேவை ஆரம்ப வைபவ நிகழ்வு இன்று காலை 7.00 மணியளவில் மருதங்கேணிச் சந்தியில் பருத்தித்துறைச் சாலை உதவி முகாமையாளர்  வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு பிரதான பிராந்திய முகாமையாளர் உபாலி கிருபத்தொடுவ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மங்கள விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

செம்பியன்பற்று தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பொ.தங்கராசா பேருந்து நாடாவை வைபவ முறைப்படி வெட்டி நிறைகுடம் சரித்து ஆரம்பித்து வைத்தார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன், பருத்தித்துறை சாலை முகாமையாளர் திரு க.கந்தசாமி மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை முன்னாள் தலைவர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள்.

பருத்தித்துறையில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும் இப்பேருந்து 7.00 மணிக்கு மருதங்கேணிச் சந்தியை அடைந்து மாசார் – புதுக்காட்டுச் சந்தி ஊடாக வவுனியாவைச் சென்றடையும். பின்னர் மதியம் 01.00 மணிக்கு வவுனியாவில் இருந்து புறப்பட்டு புதுக்காட்டுச் சந்தி – மாசார் – மருதங்கேணிச் சந்தி ஊடாக பருத்தித்துறையை வந்தடையும். இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் (செயலாற்று) திரு க.கேதீசன், பிராந்திய முகாமையாளர் (பொறியியல்) திரு.ச.பாஸ்கரன், பருத்தித்துறை சாலைப் பரிசோதகர் திரு சிவச்செல்வநாதன், பருத்தித்துறைச் சாலை ஓய்வுபெற்ற சாரதி திரு சி.சிவகுமார், வமராட்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க உபதலைவர் திரு திரவியநாதன் மற்றும் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

2

5

3

4

1

Related posts: