வடக்குக் கல்வி அமைச்சால் பாடசாலைக்கு ஆபத்து:  அதிர்ச்சியில்  கல்விப்புலம்!

Monday, October 22nd, 2018

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இயங்கும் நிலம் தமக்குரித்தானது என்றும் அதனை மீள ஒப்படைக்குமாறு இலங்கைத் திருச்சபையினர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகம் மற்றும் பாடசாலை உள்ளிட்ட வளாகம் இலங்கைத் திருச்சபைக்குச் சொந்தமானது.

குறித்த வளாகம் பாடசாலைத் தேவைக்காக 1960 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது. ஆனாலும் வடக்க மாகாண கல்வி அமைச்சு தன்னிச்சையாக தனத அனைத்து அலுவலகங்களையும் அங்கு உட்புகுத்தியதால்  தற்போது பாடசாலையின் பெயர் அழிக்கப்படும் நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனவே பாடசாலை தேவைக்காக வழங்கிய திருச்சபைக்குரிய காணியை மீளவும் ஒப்படைக்க வேண்டும் என்று சபையின் ஆயர் லியோராஜ் கனகசபை கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளார்.

கோரிக்கையைப் பரிசீலித்து ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் தனது செயலாளருக்குப் பணித்துள்ளார் என்று குறித்த சபையின் யாழ்ப்பாண அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் குறிப்பிடுகையில்

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எவரும் தம்மிடம் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் கல்வி அமைச்சிடம் இருந்தும் எந்த தகவலும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் மக்களது அக்கபூர்வமான தேவைகளுக்காக பலதரப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பமட்ட பல்வேறு நலத்திட்டங்களை வடக்கு மாகாணசபை தனது ஆளுமையற்ற தனத்தால் இழக்கச் செய்துள்ளதுடன் வடக்கு மாகாண சபையூடாக  வடக்கு மக்களின் எதிர்காலத்தையும் பூச்சியமாக்கியுள்ளதாக கல்விப் புலம் சார்ந்தோர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: