வடக்கு மாகாணத்தில் எட்டரை இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

Saturday, March 7th, 2020


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 861 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் விபரங்களினூடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா உள்ளடங்கிய வன்னித் தேர்தல் தொகுதியிலுமே இவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களுமாக மொத்தம் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


அத்துடன், வவுனியாவில் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 811 பேரும் முல்லைத்தீவில் 78 ஆயிரத்து 360 பேரும் மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேருமாக 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Related posts:

எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் - வடமாகாண கடற்றொழ...
நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை - மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவ...
பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அற...