பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் பிஎன கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் ஆற்றிய உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த பரீட்சையின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.

உயர் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி, குறித்த பரீட்சையை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன அண்மையில் நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், உயர் தரப்பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடத்துவதற்கான யோசனையையும் அவர் முன்வைத்திருந்தார்.

குறித்த யோசனை பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பரீட்சைகள் ஆணையாளருக்கு உள்ளதாகவும் கல்வி அமைச்சர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, உயர் தரப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதுடன், அதன் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச...
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு சென்ற அரச அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என குற்றச்சாட்டு!