அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு பந்துல குணவர்தன ஆலோசனை!

Friday, January 7th, 2022

டொலர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிப்பதற்கு, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால், மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதியாளர்களின் பொருட்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையும், மத்திய வங்கிக்கு இன்று கையளிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது, இறக்குமதியாளர்களுக்கு அவசியமான டொலரை, நாளைய தினம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...
தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை உருவாகும் - தேர்தல்கள் ஆணையாளர...
மக்களின் நுகர்விற்கு தேவையானளவு சீனி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது - அத்தியாவசிய சேவை...