வடக்கு – கிழக்கு பெண்களிடம் பாலியல் லஞ்சம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவிப்பு!

Friday, February 8th, 2019

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் நுண்கடன்களைப் பெற்றுள்ள பெண்களிடம் அவற்றை வசூலிக்கச் செல்வோர் பாலியல் லஞ்சம் கோருவதாக தமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

நுண்கடன் திட்டம் வறுமையைப் போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்தவொரு முன்னேற்றமும் இலங்கையில் தெரியவில்லை. நுண்கடன் திட்டம், வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையே நுண்கடன் நிறுவனங்கள் அதிகம் நாடுகின்றன.

அந்த மக்களுக்கு கடனை வழங்கும் நிறுவனங்கள் அதனை மீளச் செலுத்த முடியாத நிலமை உருவாகும்போது மிகவும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. நுண்கடன் நிறுவன ஊழியர்கள் கடனைச் செலுத்தாத பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முனைகின்றனர் என எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விடயத்தில் இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மக்கள் நுண்கடன்களை மீள் செலுத்துவதை நிறுத்த உதவ வேண்டும். என்று ஜுவான் பப்லோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: