வரி விலக்களிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சதொச மூலம் வழங்க நடவடிக்கை!

Wednesday, July 13th, 2016

வற் வரி இல்லாத அத்தியாவசியப் பொருட்களை சதொச நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் ஊடாக அரசினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிப் பொருட்களை நிவாரண விலைகளின் கீழ் நுகர்வோருக்கு பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களின் பட்டியல் மற்றும் அதற்குரிய விலைப்பட்டியல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைப்பட்டியலுக்கு அமைவாக பொருட்களை விற்பனை செய்ய விருப்பமுடைய தனியார் வர்த்தகர்களுக்கம் இந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும், அவ்வாறான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இது தொடர்பில் அரசுக்கு அறிவிக்கலாம் எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தனியார் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நாடு பூராகவும் உள்ள சதொசவின் கிளைகள் ஊடாக இந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Related posts: