நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது குறித்து மக்கள் விசனம்!

Thursday, February 2nd, 2017

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகு சேவையை நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் குமுதினி மற்றும் வடதாரகை  இலவசமான சேவையையே நடத்திவந்திருந்தன.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு நெடுந்தீவுக்கான சேவையை மேற்கொள்ளும் நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது நியாயமற்ற செயல் என பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் தனது சேவையை ஆரம்பித்த நெடுந்தாரகை படகுச்சேவை உரிய பராமரிப்பு மற்றும் கட்டண அறவீடு ஆகிய பிரச்சினைகளால் சேவையினை மேற்கொள்ளாது நிறுத்தப்பட்டிருந்து.

இந்நிலையில் இன்றையதினம் மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ளது. அத்துடன்  குறித்த படகு சேவையின் ஒருவழி பயணத்திற்காக 80 ரூவாவை அறவிடுகின்றது.

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் இலவச பயண சேவையை நடத்துவதற்காக கட்டப்பட்ட குறித்த படகு சேவை தனது பயணச் சேவையை கட்டணம் பெற்று மேற்கொள்வதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் தமது விசனங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே குறித்த படகு சேவைக்க கட்டணம் அறவிடுவது தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

15966776_1288741967831554_1397511037_o

16465983_1310658782306539_1011996063_o

Related posts:

வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் -  ஈ.பி.டி.பிய...
துயரம் நிறைந்த வாழ்விலிருந்த மக்களுக்கு  நம்பிக்கை ஒளியை ஏற்றியவர்கள் நாம் - வேலணை பிரதேச சபை தவிசாள...
அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹ...