புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வரை சமர்ப்பிக்க முடியும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, November 17th, 2023

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்நிலை முறையில், குறித்த விண்ணப்பங்களை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்பதாக 2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சிறிது நேர்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 147 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான சிங்கள மொழிமூல அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 154 பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உரிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை தயாரித்து நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சருக்கு உத்தரவிடுமாறு கோர...
மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் - ...
மனித உரிமைகள், மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் புதிய திருத்தச் சட்டம் - வெளிவிவகார அமைச்சர் பேராச...

பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் 4 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொ...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு - கல்வி அமைச்சு அறிவிப...
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது - அணுசக்தி ஒழு...