வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல் தொடர்பில் அமைச்சர் ரெஷான்ரணசிங்க தலையில் கலந்துரையாடல்!

வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணக் கலந்துரையாடல் ஒன்று விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் ரெஷான்ரணசிங்க தலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இளைஞர்களுக்கான வலுவான பொருளாதாரம், ஆரோக்கியமான இளைஞர் தலைமுறை, தேசிய பொருளாதாரத்திற்கான வலுவான இளைஞர் தொழில்முனைவு, இளைஞர் திறன் மற்றும் திறன்களை மேம்படுத்துதல், மற்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைகள், இளைஞர்கள், இளைஞர்கள் சமூக பள்ளி, இளைஞர் நாடாளுமன்ற அதிகாரம், இளைஞர்கள் விளையாட்டு பொருளாதாரத்தில் மேம்படுத்தல் ஆகிய துறைகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ் மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை உட்பட வடமாகாண விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|