இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் !

Monday, October 17th, 2016
அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று பசிக் கொடுமையில் இருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே உலக வறுமை ஒழிப்பு தினத்தின் பிரதான நோக்கமாகும் .
உலகில் எங்கோ ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகின்றது என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசபர் ரெசின்கி கூறினார். இவர் சிறுவயது முதலே வறுமைக்கு எதிராக போராடி உலக வறுமை ஒழிப்பு தினமாக 1987ம் ஆண்டு அக்டோபர் 17ல் ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
உணவு ,உடை, வசிப்பிடம், சுத்தமான நீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் பெறும் மரியாதை என்பன வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதாக அமைக்கின்றது. இவற்றை இழந்தவர்களையே வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களாக கணிக்கின்றோம்.
இதனை இல்லாதொழிக்க விவசாயத்தை அதிகரித்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து நாட்டில் வறுமை நிலையினை குறைத்துக் கொள்ளலாம்.

10a6806fe1a0af7b1cc3d4fe86aef03f_L

Related posts: