கல்வியங்காடு சந்திக்கருகில் வீதியோரமாக பொருட்களைப் பரப்பி வைத்து வியாபாரம் செய்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

Tuesday, May 10th, 2016

கல்வியங்காடு சந்திக்கருகில் வீதிக்கு அண்மித்த வகையில் பொருட்களைப் பரப்பி வைத்து வியாபாரம் செய்து வந்த வர்த்தக உரிமையாளர்கள் மீது கோப்பாய்ப் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வர்த்தகர்கள் வீதியோரமாகப் போடப்பட்டுள்ள வெள்ளைக் கோடு வரை தமது வியாபாரப் பொருட்களைப் பரப்பி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர் . இதன் காரணமாகப் பாதசாரிகள் மற்றும் வாகனதாரிகள் போக்குவரத்துச் செய்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கினர்.

இவ்வாறு பரப்பி விற்பனை செய்யப்பட்ட பொருட்களை அகற்றிப் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட வர்த்தகர்கள் அதனைச் செவி சாய்க்கவில்லை. இந் நிலையில் கோப்பாய்ப்  பொலிஸாரால் மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக  யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts: