ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

Thursday, November 16th, 2023

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி பூர்த்தி செய்து ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் நடைபெற்றது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் பொன் விழா மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் த.சசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்தில் 302 பேருக்கு இதன்போது சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் – வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில் 1169 மாணவிகள் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவெடுத்தூள்ளார்கள் என வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் இ.சசீலன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் கற்கைநெறியின் ஆடை வடிவமைப்பிற்கான தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரத்தில்  சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ்  2016 ஆம் முதல் மனைப்பொருளியல் 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளார்கள்.குறித்த யுவதிகளால்  1169 மாணவிகள் சுயதொழில் சுயதொழில் முயற்சியாளர்களாக இன்று வடமாகாணத்தில் உருவாக்கியுள்ளார்கள் .

இவ்வருடம் 398 பேர் தேசிய தொழில் தகைமை 4 ஆம் தரத்தில்  சித்தி பெற்று 302 பேர் இன்றைய தினம் தங்களுக்குரிய சான்றிதழை பெற்றுள்ளார்கள்.கொவிட் நெருக்கடியால் சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெறவில்லை.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் பிரதேச மட்டத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.

சிறந்த தொழில் முயற்சியாளர்களாக இன்று பல யுவதிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக சவாலுக்கு மத்தியில் பயிற்சி நெறிகளை கொண்டு நடாத்தினோம்.இந்த மாணவிகளுக்கான உதவி கொடுப்பனவு கூட எமக்கு  சவாலாக அமைந்தது.இருந்தும் எம்மால் தொடர்ச்சியாக எம்மால் முன்னெடுக்கமுடிந்தது..

எதிர்காலத்தில் மேலும் இவ் பாடாநெறியின் செயற்பாட்டினை அதிகரிக்க நாம் உதவுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு நீதியமைச்சர் விஜயதாச பணிப்புரை!
இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் - உலக உணவுத் திட்டம் தக...
வியாழன்முதல் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் - நிதி இராஜாங்...