யாழ். மாநகரப் பகுதியிலுள்ள குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை!

Tuesday, October 4th, 2016

யாழ். மாநகர சபைக்குட்பட்ட குளங்களைப் புனரமைப்பதற்கு முன்னோடியாக முதற்கட்டமாக ஏழு குளங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியிலுள்ள 44 குளங்கள் உலக வங்கியின் நிதியுதவியுடன் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கு முன்பாக நீர் வளச் சபையினால் குறித்த குளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

குளங்களிலுள்ள நீர்மட்டம், தன்மை, அடைவுகள் யாவும் ஆய்வின் மூலம் பரிசோதிக்கப்படும். குளங்களில் நீரின் தன்மையைப் பொறுத்து சுற்றுச் சூழல் நீரின் தன்மையையும் உறுதிப்படுத்த முடியும்.

குளப் புனரமைப்பின் போது சில முக்கிய குளங்கள் மக்களைக் கவரும் வகையிலும், மக்களின் பொழுது போக்கிடமாகவும் புனர் நிர்மாணம் செய்யப்படும்.

20090226_18

Related posts: