வெளிநாட்டு வேலைவாய்ப்புதுறை விரைவில் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!
Monday, February 13th, 2023
வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விரைவில் எண்மான (Digital) மயப்படுத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஓமானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை எண்மான மயப்படுத்துமாறு ஓமான் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், எண்மான மயமாக்குவதற்கான பணிகள் விரைந்து முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயரும்!
குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவ...
|
|
|


