அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது – இராஜாங்க அமைச்சர் டிலான்!

Thursday, November 2nd, 2017

புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்காக புதிய பாதையில் பிரவேசத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பின் நடவடிக்கை குழுவின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாத்தின் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், இனவாதிகள் மதவாதிகள் போன்ற அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் உள்ள பிரச்சனைகளை கலந்துரையாட வேண்டும் . இதனை வலுப்படுத்த வேண்டும். சமஷ்டியை தோற்கடித்தவர்கள் அதனை கோருகின்றனர். இந்த விடயத்தில் ஓற்றையாட்சி உண்டு.

பௌத்த மதத்திற்கான உரிமை உண்டு. நடுநிலையாக சிந்தித்து நாம் செயற்பட வேண்டும். தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.கட்சியின் முனைப்பாட்டுக்காக முன்நிற்போம். நேர்மையாக செயற்படுவோம். நாட்டின் இனவாதிகள் மதவாதிகள் போன்ற அற்பசிந்தனை கொண்டவர்களின் தீக்கு நாட்டை இரையாக்க இடம் அளிக்க முடியாது.

இது இறுதி பஸ் வண்டியாகும். முக்கிய அரசியல் கட்சி தேசிய பிரச்சனையில் காற்பந்தாட்டம் விளையாடியது. இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதில் அரசியல் நன்மை பெற்று கொள்ள முயற்சிப்போh நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு மேற்கொள்ளும் தீங்காகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: