வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
Monday, February 18th, 2019
வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்தது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 11,000 விவசாயிகள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்ததாகவும் சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துக வீரசிங்க குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதற்கு 400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்- பிரதமரைச் சந்தித்துப் பேச்சு: போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு!
மீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
உள்ளூராட்சி தேர்தல் 2023 - கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு - நாள...
|
|
|


