நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
Tuesday, May 8th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நீல் இத்தாவெல குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இராணுவ அணிவகுப்புகளும் மற்றும் சில சம்பிதாயப்பூர்வமான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியை, சபாநாயகர், பிரதமர் ஆகியோர் வரவேற்கவுள்ளனர்.
அதன் பின்னர், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட உள்ளார்.
அரசாங்கத்தின் அந்த கொள்கை பிரகடனம் தொடர்பான அறிவிப்பு குறித்த, ஒருநாள் விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.கடந்த தினத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
Related posts:
கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலி
நேர மாற்றத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் ஆரம்பம் - பாட திட்டத்தை முழுமையாக உள்ளடக்க...
மின் தடை - விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!
|
|
|


