இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநான் உறுதி!

Sunday, June 21st, 2020

இரணைமடு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் அடுத்துவரும் புதிய அரசில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக முன்னெடுத்து இப்பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வியலுக்கான பொருளாதாரம் உறுதி செய்யப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலக்கம் 8 இல் போட்டியிடுபவருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்ட வை. தவநாதன் அந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தேரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் –

தற்போது கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக இருக்கும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு நன்னீர் மின்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரணைமடு குளத்தில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மீன்குஞ்சுகளை விட்டு அத்தொழிலை முன்னெடுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்திருந்தார்.

அதுமட்டுமல்லாது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கும் அதிகளவான ஆதரவு பலத்துடன் புதிய அரசில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இரணைமடு குள நன்னீர் மீன்பிடியை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அறுவடை செய்யப்படும் கடலுணவுகளை பதப்படுத்தல் மற்றும் சந்ததைப்படுத்தல் போன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி அதற்கான ஏதுநிலைகளையும் உருவாக்கித் தருவதற்கான பொறிமுறைகளை உருவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்பிரதேசத்தின் அபிவிருத்தியை அன்றைய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆதரவுடன் அன்று அதிவிரைவாக முன்னெடுத்து பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத்தந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தற்போது ஜனாதிபதியாக இருக்கும் கோட்டபய ராஜபக்சவே தொடர்ந்தும் குறைந்தது 5 வருடங்களுக்கு ஜனாதிபதியக இருக்கவுள்ள நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் அவரை தலைமையாக கொண்ட அரசே அமையும் என்பது உறுதி.

அந்தவகையில் அந்த அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அந்த அரசில் பெரும் அமைச்சராக தொடர்வார் என்பதும் உறுதியான நிலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைமையாக கொண்டு வீணைச்சின்னத்தில்’ போட்டியிடும் எமது கட்சியின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கவேண்டியது மக்களின் நலன்களை மேலும் வழப்படுத்தும்

அந்தவகையில் இம்முறை எமது வீணைச் சின்னத்துக்கு ஒருமித்த ஆதரவை தந்து எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களை பலப்படுத்தி உங்களது எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.

Related posts: