புதிய பேருந்து கட்டணம் இன்று வெளிவரும்?

Monday, July 11th, 2016

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பான புதிய கட்டணம் தொடர்பில் இன்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இன்று காலை கூடவுள்ள நிபுணர் குழு இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது. போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் இந்த குழு கூடவுள்ளதோடு இதில் பேருந்து சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளன.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.

ஆனால் இம்முறை வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தமாக போக்குவரத்து அமைச்சினால் முன்மொழியப்பட்ட நூற்றுக்கு 03.2 என்ற வீகிதத்திற்கு பேருந்து சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் சிக்கல் நிலை தோன்றியது.  இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பேருந்து சங்கங்கள் தயாரான நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டினால் இது பிற்போடப்பட்டது.

பின்னர், இன்று இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எதுஎவ்வாறு இருப்பினும் பேருந்து கட்டணத் திருத்தத்திற்கு அமைய குறைந்தபட்ச கட்டணமாக ஒரு ரூபாயே அதிகரிக்க முடியும் எனத் தெரியவந்துள்ளது.

Related posts:

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது ...
இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையி...
கிளிநொச்சியில் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் கவலை!