கிளிநொச்சியில் பாடசாலைக்கு சமுகமளிக்காத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் கவலை!

Wednesday, August 3rd, 2022

கிளிநொச்சி, கோணாவில் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்து்ளளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

இப் பாடசாலையில் தரம் 10கல்வி கற்கும் மாணவன் கடந்த வாரம் தனது துவிச்சக்கர வண்டியை தொலைத்ததையடுத்து மூன்று நாட்களாக பாடசாலைக்குச் செல்லவில்லையெனவும், பின்னர் இவ்வாரம் பாடசாலைக்குச் சென்றபோது அந்த மாணவன் பாடசாலைக்குச் செல்லாத நாட்களில் வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களை மாணவன் செய்யவில்லை எனத் தெரிவித்து பெரிய தடி ஒன்றினால் மாணவனை தாக்கியுள்ளாரெனவும் இதனால் கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு வீக்கம் மற்றும் உட் காயம் காரணமாக மாணவன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அத்தோடு மாணவன் தற்போது பாடசாலைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் எனவே அவனை வேறு பாடசாலை ஒன்றில் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியதோடு இது தொடர்பில் கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: