சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு பிரதமரே பொறுப்புக்கூற வேண்டும்

Saturday, July 8th, 2017

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும் என்று பெரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

அரசு ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்வதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 19ஆம் திருத்தச் சட்டம் கூட தற்போதைய அரசின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. தேசிய அரசு அல்லாத நிலையில் பெரியளவில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கணக்காய்வு சட்டம் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி முன்ரவத் தவறினால் அவரும் மக்களை ஏமாற்றியதாகவே கருத்தப்பட நேரிடும். என்றார்.

கடந்த ஆண்டில் லெசில் டி சில்வா செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக நீக்கப்பட்டார் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: