அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Sunday, April 19th, 2020

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் எவர் எவர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

ஒரு நாளில் பணிக்கு சமுகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறை நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமுகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: