மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் வெளியீடு!

Monday, February 21st, 2022

அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்..

இதன்போது, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகன பாவனை தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தனியார்த்துறையின் சேவையாளர்களின் அலுவலக நேரத்தை திருத்துவது தொடர்பான தேசிய தொழில் ஆலோசனை சபை இன்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.

இன்று (21) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தனியார் நிறுவன முதலாளிமார் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோரும் பங்கேற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து இன்று திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: