கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விசனம் – முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்!

Thursday, October 10th, 2019


முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைப்பதற்குரிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் அவற்றை அமைப்பதற்கான எந்தவித அனுமதிகளும் இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக பயிர்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் மாதங்களில் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் அதிகளவான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுவதுடன், அதற்கு அடுத்த படியாக கால்நடைவளர்ப்பு காணப்படுகின்றது. இந்நிலையில் திறந்த வெளிவாய்ப்பு முறைகளை மேறகொள்ளம் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் எதுவும் இல்லாத நிலையில் பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பயிர்ச்செய்கைகளுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் தமது கால்நடைகளை பராமரித்து வந்தனர்.

தற்போது மாவட்டத்தில் பயிர் செய்கைகளுக்கு உட்படுத்தப்படாது காணப்பட்ட நிலங்கள் யாவும் பயிர்செய்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், சதுப்பு நிலங்களாக காணப்படும் இடங்கள் கரையோரப்பகுதிகள் என்பன வனவளத்திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு அவற்றில் கால்நடைகளை பராமரிப்பதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கடந்த காலபோகத்தின் போதும் அதற்கு முன்னரும் கால்நடைகளை பராமரிக்க முடியாது பண்ணையாளர்கள் பெரும் சிரமங்கை எதிர்கொண்டதுடன், கடந்த ஆண்டில்பெருமளவான கால்நடைகள் உயிரிழந்தும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் இறுதியாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் மேற்படி கோரிக்கைள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: