யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனமயப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அபிவிருத்திப் பணிகள்!

Wednesday, May 25th, 2016

யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியின்  ஊடாக 55.5 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியுதவியுடன் அபிவிருத்திப் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப் படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே  தெரிவித்துள்ளார்.

வடக்கின்  முக்கிய கேந்திரமாகவுள்ள யாழ்.மாவட்டத்தினை அபிவிருத்தி செய்யும் வகையிலும்,அபிவிருத்தியின் கட்டமைப்பினை உருவாக்கும் வகை யிலும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பான உயர் மட்டக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(24-05-2016) யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே  தலைமையில் நடைபெற்றது. இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் இன்றைய காலத்தில் யாழ்.மாவட்டம் முக்கிய இடத்தினைப் பெற்று வருகின்றது. மேலும் பல சுற்றுலாப் பயணிகளின் வருகையும் யாழ் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அவற்றிக்காக ஒரு அபிவிருத்தியினை  முன்னெடுக்கும் வகையில் நாம் இவ்வாறான அபிவிருத்திகளை முன்னேடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: