அதிக விளைச்சலுக்கு விதை அத்தாட்சிப்படுத்தப்படும்  – நிலையப் பொறுப்பதிகாரி தகவல்!

Saturday, October 15th, 2016

விவசாயிகள் விதை நெல் மற்றும் நடுகை செய்யும் விதைகளை விதை அத்தாட்சிப்படுத்தும் பிராந்திய நிலையத்தில் அத்தாட்சிப்படுத்தியும் அதைனைத் துப்பரவு செய்தும் நடுகை செய்வது உற்பத்தி செலவினங்களைக் குறைக்கும் அத்துடன் ஆகக்கூடிய விளைச்சலையும் பெந்நுக் கொள்ளலாம். இவ்வாறு யாழ்.மாவட்ட விதை அத்தாட்சிப்படுத்தல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.ரமணிரதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட விதை அத்தாட்சிப்படுத்தல் நிலையம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முதன்மை வீதியில் (கோப்பாய் பூதர் மடம் சந்தியில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அண்மையில்) அமைந்துள்ளது.

விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பின் அவசியம் தொடர்பாக அத்தாட்சிப்படுத்தல் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தகவல் தெரிவிக்கையில்:

எமது பிரதேச விவசாயிகள் மரபு வழியாக விதைநெல்லை தமது வீடுகளில் களஞ்சியப்படுத்தே பயன்படுத்துகின்றனர். நீண்ட காலத்திற்கு விதை நெல்லை வீடுகளில் வைத்திருக்கும் போது விதை நெல் பூச்சித் தாக்கங்களுக்கு உள்ளாகிச் சேதமாகின்றது. விதை நெல்லைச் சுத்திகரிக்கும்போது சேதமடைந்து பூச்சிகளின் தாக்கங்களுக்கு உள்ளாகிய நெல்லும் புல் விதைகளும் முற்றாக அகற்றுப்படுகின்றன. திருநெல்வேலியில் உள்ள விதை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்துடன் (சீக்கோ) தொடர்பு கொண்டு விதை நெல்லை சுத்திகரித்துக் கொள்ளலாம். விதைகளின் முளைதிறன் தொடர்பான அத்தாட்சிப்படுத்தலைக் கோப்பாயில் அமைந்துள்ள பிராந்திய விதை அத்தாட்சிப்படுத்தல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலாம். விதை அத்தாட்சிப்படுத்தலுக்கு வரும்போது பயன்படுத்தப்படவிருக்கும் விதைகள் முழுவதையும் எடுத்துவர வேண்டும். முளைதிறன் தொடர்பான அத்தாட்சிப்படுத்தலுக்கு 172 ரூபா கட்டணமாகச் செலுத்தியும் முளைதிறன் மற்றும் தரநிலை தொடர்கான முழுமையான அத்தாட்சிப்படுத்தலுக்கு 345 ரூபா கட்டணமாகச் செலுத்தி அத்தாட்சிப்படுத்திக் கொள்ளலாம் அத்தாட்சிப்படுத்தல் தொடர்பான பத்திரம் வழங்கப்படும் – என்றார்.

Tamil_News_581260323525

Related posts: