உள்ளூராட்சி தேர்தல் 2023 – கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்று மதியம் 12 அணியுடன் நிறைவு – நாளை நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம்!

Friday, January 20th, 2023

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

முன்பதாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கட்டுப்பணம் வைப்பு பணிகள் தொடங்கியதில் இருந்து, பல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.

இதனிடையே, 10 அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தன.

அத்துடன் நாளை சனிக்கிழமை (21) நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு ஏற்பு முடிவடைகிறது.

இதுவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் முதல் நாளில் இருந்து இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் பிரதிநிதிகளின் பலவித வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றுவது, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் 61 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: