வடக்கில் இ.போ.ச. சாரதிகள் பணிப்புறக்கணிப்பு – பயணிகள் அவதி!

இ.போ.ச சாரதி தாக்கப்பட்டதை கண்டித்து வடக்கு மாகாண இலங்கை போக்கவரத்து சபை சாரதிகள்கால வரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (02) காலையில் இருந்து இந்த காலைவரையற்ற போராட்டதில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியாவில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றையதினம் இ.போ.ச சாரதிக்கும்-தனியார் சாரதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில் இ.போ.ச. சாரதி படு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே தமது சாரதி தாக்கப்பட்டதை கண்டித்து வடக்கு மாகாண இ.போ.ச சாரதிகள் இன்றையதினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகிஸ்கரிப்பால் மாணவர்கள், அரச ஊழியர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயளர்கள் என பலரும் பெரும் அசௌகரியங்களுக்க உள்ளாகியுள்ளனர்.
Related posts:
|
|