கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசி சிறந்தது – சுகாதார அமைச்சுக்கு மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனம் பரிந்துரை!

Wednesday, May 19th, 2021

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசியை வழங்குவது சிறந்தது என மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தினால் சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, ஏனையவர்களுக்குப் போன்று தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடக்கூடாது என்றும், இதற்காக விசேட வழிமுறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகப்பேற்று பெண்ணோயியல் மருத்துவர்கள் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் சாமிந்த மாதொட்ட தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பெண்ணோயியல் வைத்தியர் மயுரமாண தெவலகேயும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நியூமோனியா நிலைக்கு தள்ளப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கையில் ஒரு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: