ஊடகத்தை கைத்தொழிலாக முன்னெடுக்க தேவையானவற்றை மேற்கொள்ளுவது அரசாங்கத்தின் பொறுப்பு!

Tuesday, July 18th, 2017

ஊடகத்தை கைத்தொழிலாக முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகளையும், பின்புலத்தையும் உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய தொவித்துள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி நிலையங்களை தரப்படுத்தல் முறை பற்றி சுயாதீன கல்விமான் குழு வரைந்த மதிப்பீட்டு அறிக்கை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே கலான்சூர்pய இவ்வாறு கூறினார்.

இலாபம், மக்கள் நலன் உள்ளிட்ட விடயங்களை முதன்மைப்படுத்தி இயங்கும் தொழிலாகும். ஊடக நிறுவனங்களின் தரப்படுத்தலில் ஊடகங்கள் தங்கியிருக்க நேர்ந்துள்ளதால் தரப்படுத்தல் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாத விடயமாக மாறியுள்ளதென்றும்  கலாநிதி கலன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று கொழும்பு பல்கலைக்கழக குடிசனவியல் ஓய்வு நிலை பேராசிரியர் கே.ஏ.பி.சித்திசேன, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ரத்னசிறி அரங்கல ஆகியோர் தலைமையிலான குழு அறிக்கை வரைந்திருந்தது.

Related posts: