வடக்கின் தேசிய அடையாளங்களை மாற்றியமைக்க திட்டமிடும் வடக்கு மாகாண சபை!

Thursday, December 15th, 2016
வடக்கின் தேசிய அடையாளங்களான விலங்கு, பூ, பறவை என்பவற்றை மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு மீள் பரிசீலனைக் குழுவொன்றை அமைக்க வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று வடக்கு மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது.

குறித்த அமர்வில் ஏற்கனவே வடக்கு மாகாணத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விலங்கு, பூ, பறவை என்பன எமது மாகாணத்துக்குப் பொருத்தமற்றிருப்பதால் அதனை மாற்றியமைப்பதற்கும், மக்களின் கருத்துக்களை அறிவதற்குமாக குழுவொன்று அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவற்றை மீள்பரிசீலனை செய்து மாற்றியமைக்க சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாகாண சுற்று சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவைதலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கோரியிருந்தார்.

இதனை ஆமோதித்த வடக்கு மாகாணசபை அவைத்தலைவர், இதற்கு விரைவாக மக்களின் கருத்துக்களை உள்வாங்கி, மீள்பரிசீலனை செய்வதற்கு குழுவொன்றை நியமிக்கவும் அனுமதி வழங்கியுள்ளார்.

தற்போது வடக்கு மாகாணத்தின் தேசிய விலங்கு ஆண்மான், தேசிய பறவை புலுணி, தேசிய மரமாக மருதமரம் ஆகியனவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

1549537_198225150384809_765951259_n

Related posts: