அமுலானது ஊரடங்கு சட்டம்: மீறினால் தண்டனை !

Monday, March 30th, 2020

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க டொலருக்க நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 192 ரூபாய் 50 சதமாக பதிவாகியுள்ளதோடு மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அத்துடன் தொடரும் ஊரடங்கினால் நாட்டில் நாளாந்த மின் பயன்பாட்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49 முதல் 33 வரையிலான கிகாவோட் மின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: