சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் !

Wednesday, June 5th, 2019

22 வருடகால சேவையை பூர்த்தி செய்த 50 வயது நிரம்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்குதல் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையக கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

30 வருடகால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முப்படை மற்றும் காவற்துறையினருடன் ஒன்றிணைந்து சிவில் பாதுகாப்புத்துறையினர் ஆற்றிய சேவையானது மகத்தானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாகவும், 2015 ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிக்கமைய சிவில் பாதுகாப்புத்துறை சேவையை ஓய்வூதியத்திற்குரிய அரச சேவையாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts: