கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை – மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் இராஜகோபு சுட்டிக்காட்டு!

Monday, September 6th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு பாரிய குளங்களும் ஐந்து நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 ஆண்டுக்கு முன்னர் 40% இற்கும் குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68% ஆகவும் 2020 இல் 68.2% ஆகவும் இவ்வருடம் 2021 இல் 78.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக குறித்த மாவட்டத்தின் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் இராஜகோபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

குறித்த அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிற்செய்கை 82% ஆக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பொது பங்குகள் பங்கணைத்தலில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அத்துமீறல்கள் என்பவற்றை கணக்கிடும் போது இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இடம்பெற்றுள்ளதை அறிய முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்த;டன் குறித்த அடைவு மட்டமானது விவசாயிகளின் பங்களிப்புடன் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் சிறப்பான நீர் முகாமைத்துவத்தின் மூலம் அடையப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: