பிரித்தானிய தேர்தல்: பழமைவாத கட்சி முன்னிலை?

Friday, December 13th, 2019

பிரித்தானியாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பழமைவாதக் கட்சி(Conservetive Party) பெரும்பாண்மை ஆசனங்களுடன் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

ஸ்கை நியூஸ் (Sky News) தொலைக்காட்சி சேவை மேற்கொண்ட கருத்துக்கணிப்பை தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த சில நொடிகளில் வெளிட்டது.

கொன்சவேட்டிவ் கட்சி – 368 ஆசனங்களும், தொழில் கட்சி – 191 ஆசனங்களும் பெறலாம் என்று முதற்கட்ட கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு பிரித்தானிய நேரம் 10:00 மணிக்கு முடிவடைந்த தேர்தலில் முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை மதியம் அளவில் வெளியிடப்படும் என பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின் பிரகாரம், தேர்தல் முடிவுகள் சரியாக இருந்தால் Conservetive கட்சித் தலைவரும், பிரதமருமான போரிஸ் ஜோன்சன், அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதற்கு தேவையான ஆதரவை நாடாளுமன்றில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், 1987ம் ஆண்டு ஆண்டிலிருந்து Conservetive கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாகும் எனவும், 1935ம் ஆண்டிலிருந்து தொழிற்கட்சிக்கு கிடைக்கும் மோசமாக முடிவாக இருக்கும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது கடந்த ஐந்தாண்டுகளுக்குள் பிரித்தானியாவில் நடக்கும் மூன்றாவது பொது தேர்தலாகும். 100 ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் நடக்கும் முதல் தேர்தலாகும்.

“Brexit உடன்படிக்கையை செய்து முடிக்கவும்”, பெரும்பான்மை கிடைத்தால் 2020 ஜனவரி 31ம் திகதிக்குள் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: