டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 11th, 2018

கிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை துரிதகதியில் முன்னெடுத்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே இன்று வடக்கின் அபிவிருத்தி மட்டுமல்லாது நாட்டின் தளம்பல் நிலைக்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண தொண்டராசிரியர்களை கா வேலும்மயிலும் குகேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் தளம்பல் நிலை ஏற்படாதிருந்திருந்தால் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த குறுகிய காலத்திலேயே உங்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்று தந்திருப்பார்.

ஏனெனில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை என்றும் பெற்றுக்கொடுத்தவர்கள் நாமே. அதன் உரிமையாளர் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே.

ஆனாலும் தற்போது இந்த விடயம் உடனடியாக செய்து முடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.  அரசு தொடரும் சந்தர்ப்பம் கிடைத்தாலோ அன்றி நிரந்தரமான அரசு அமையும் சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் உங்களது நிரந்தர நியமனங்கள் நிச்சயமாக உறுதிசெய்யப்படும்.

தற்போது வடக்கு ஆளுநரின் அலுவலகம் முன்பாக நியமனம் கிடைக்காது பாதிக்கப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 288 பேர்  உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளீர்கள்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த கடும் பிரயத்தனத்தின் காணமாக இவ்வருட ஆரம்பத்தில் வடமாகாண தொண்டராசிரியர்கள் 1,044 பேருக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.

அவர்களில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி 182 பேருக்கு அலரி மாளிகையில் வைத்தும் ஜீலை மாதம் 22 ஆம் திகதி 457 பேருக்கு யாழ் இந்துக் கல்லூரியில் வைத்தும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் எஞ்சிய உங்களுக்கான நியமனங்களை கடந்த வடக்கு மாகாண ஆட்சியாளர்களே நிறைவேற்றியிருக்கலாம். ஆனாலும் கடந்த வடக்கு மாகாண ஆட்சியாளர்கள் மக்களுக்கான எதனையும் மேற்கொள்ளாது ஆட்சிக்காலத்தை தமது சொந்த நலன்களுக்காக பயன்படுத்தி நிறைவு செய்து சென்றதன் பின்னர் தற்போது வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்கள் தனக்குரிய அதிகாரங்களை கொண்டு வடக்கின் செயற்பாடுகளை ஓரளவு முன்னெடுத்து வருகின்றார்.

இருந்தும் உங்களது பிரச்சினைகள் மத்திய அரசில் அமைச்சரவை பத்திரம் மூலமே நிறைவு செய்யப்பட வேண்டிய விடயம். அதற்கான சந்தர்ப்பம் நிச்சயம் உருவாகும் என்றார்.

இதனிடையே நீண்டகாலமாக ஊதியங்களைக் கூட எதிர்பாராது தாம் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குறித்த தொழிலையே தமது எதிர்காலமாக நம்பியிருப்பதாகவும்,  குறித்த சந்தர்ப்பம் தமக்கு கிடைக்காது போனால் தமது குடும்பநிலை பாதிக்கப்படும் என்றும் தமது குடும்ப நிலைமைகளை அவதானத்தில் கொண்டு விரைவில் தங்களின் நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள் குகேந்திரனிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

viber image0000

viber image0000

viber image00

Related posts: