கடன் தரவரிசை கீழிறக்கம் – இலங்கை மத்திய வங்கி எதிர்ப்பு!

Wednesday, December 5th, 2018

இலங்கையின் நெடுநாள் உயர்தர கடன் தரப்படுத்தலினை குறைப்பதற்கு சர்வதேச தரத்திலான பிட்ச் ரேடிங் நிறுவனம் (Fitch Ratings) மற்றும் ஸ்டேண்டர் அண்ட் புவர்ஸ் (Standard & Poor’s )ஆகிய நிறுவனங்கள் எடுத்த தீர்மானத்திற்கு இலங்கை மத்திய வங்கி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த கடன் தரப்படுத்தலானது, குறித்த நிறுவனங்களால் B+ மட்டத்தில் இருந்து B மட்டம் வரைக்கும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது நாட்டிலுள்ள பொருளாதார கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமையுடன் அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிகளாலும், வெளிநாட்டு கடன்களை மீண்டும் திருப்பி வழங்குவது தொடர்பில் அவதானம் ஏற்பட்டுள்ளதனையும் கருத்தில் கொண்டே இலங்கை கடன் தரப்படுத்தலை குறைக்க நடவடிக்கை எடுத்ததாக பிட்ச் ரேடிங்க்ஸ் சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: